2012-11-29 15:48:47

மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டத்தின் ஐந்தாவது நூற்றாண்டு விழா


நவ.29,2012. மத்திய அமெரிக்கப் பகுதிகளில் நிறுவப்பட்ட முதல் மறைமாவட்டமான Santa Maria la Antigua தன் ஐந்தாவது நூற்றாண்டை இப்புதனன்று கொண்டாடியது.
மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள Guatemala, El Salvador, Honduras, Nicaragua, Costa Rica, Panama ஆகிய நாடுகளிலிருந்து வந்திருக்கும் ஆயர்கள் இந்த ஜுபிலி விழாவை ஒரு கூட்டுத் திருப்பலியுடன் துவக்கிவைத்தனர்.
நவம்பர் 30, இவ்வெள்ளி முடிய நடைபெறும் இந்த விழாவில் மத்திய அமெரிக்கப் பகுதியில் உள்ள நாடுகள் சந்திக்கும் பல பிரச்சனைகளும் பேசப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறப்பாக, இப்பகுதிகளில் சுரங்கத்தொழில் என்ற பெயரால் மண்ணின் வளங்கள் அனைத்தும் பன்னாட்டு நிறுவனங்களால் சுரண்டப்படுவதைக் குறித்து விவாதங்கள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.