2012ம் ஆண்டில் அமெரிக்க ஆயர்கள் பேரவை செய்துள்ள 28,05,442 டாலர்கள் நிதி உதவிகள்
நவ.29,2012. ஆப்ரிக்க நாடுகளில் உள்ள 16 ஆயர் பேரவைகள் அனுப்பியிருந்த விண்ணப்பங்களில்
49 விண்ணப்பங்களுக்கு 12,26,500 டாலர்கள் நிதி உதவி செய்ய அமெரிக்க ஆயர் பேரவை முடிவு
செய்துள்ளது. அமெரிக்க ஆயர் பேரவையின் ஓர் அங்கமான ஆப்ரிக்கத் திருஅவைப் பணிகள் அவையின்
இந்த முடிவினால் எத்தியோப்பியா, உகாண்டா, டான்சானியா ஆகிய நாடுகள் உதவிகள் பெறும் என்று
அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது முடிவான இத்தொகையுடன் சேர்த்து, 2012ம் ஆண்டில் அமெரிக்க
ஆயர்கள் பேரவை 28,05,442 டாலர்கள் நிதி உதவிகளை 109 பணித்திட்டங்களுக்கு வழங்கியுள்ளது. கடந்த
முப்பது ஆண்டுகளில் ஆப்ரிக்கத் திருஅவை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்றும், அவர்களுக்குச்
செய்யும் உதவிகள் நம்பிக்கை ஆண்டின் ஓர் அடையாள வெளிப்பாடு என்றும் அமெரிக்க ஆயர்கள்
பேரவையின் சார்பில் பேசிய ஆயர் John Ricard கூறினார்.