2012-11-28 15:58:12

கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் அகில உலகக் கருத்தரங்கு


நவ.28,2012. மறைபரப்புப் பணி, திருஅவை, இறையியல் ஆகிய முப்பரிமாணங்கள் அடங்கிய ஓர் அகில உலகக் கருத்தரங்கு உரோம் நகரில் உள்ள கிரகோரியன் பாப்பிறை பல்கலைக் கழகத்தில் இப்புதனன்று ஆரம்பமானது.
இப்பல்கலைக் கழகத்தில் 1931ம் ஆண்டு துவக்கப்பட்ட மறைபரப்புப் பணியியல் (Missiology) என்ற பிரிவின் 80ம் ஆண்டு நிறைவையும், இரண்டாம் வத்திக்கான் சங்கம் ஆரம்பமானதன் 50ம் ஆண்டு நிறைவையும் சிறப்பிக்கும் விதமாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதன் முதல் வெள்ளி முடிய நடைபெறும் இந்த மூன்று நாள் கருத்தரங்கில் பல நாடுகளிலிருந்தும் வந்திருக்கும் இறையியல் வல்லுனர்கள் பங்கேற்று வருகின்றனர்.
விசுவாசக் கோட்பாட்டுத் திருப்பீடப் பேராயத்தின் ஆலோசகராகப் பணியாற்றிய கர்தினால் Karl Josef Becker என்ற இயேசு சபை பேராசிரியர் இக்கருத்தரங்கின் இறுதிநாள் அமர்வில் உரையாற்றுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.