2012-11-27 15:25:49

நைஜீரியாவின் கிறிஸ்தவக் கோவில் மீது மீண்டும் வெடிகுண்டுத் தாக்குதல்


நவ.27,2012. நைஜீரியாவின் வட பகுதியில் இராணுவ முகாம் ஒன்றிலிருந்த கிறிஸ்தவக் கோவில் மீது இரு தீவிரவாதிகள் மனித வெடிகுண்டாக மாறித் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து 11 பேர் உயிரிழந்துள்ளனர், 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
Jaji நகரில் இஞ்ஞாயிறன்று இடம்பெற்ற இத்தாக்குதலை Boko Haram என்ற இஸ்லாமிய தீவிரவாதக் குழு நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மனித வெடிகுண்டாக ஒருவர் கோவிலைத் தாக்கி சேதம் விளைவித்ததைத் தொடர்ந்து அப்பகுதியில் உதவச் சென்றவர்கள் மீது அடுத்த பத்து நிமிடங்களில் மீண்டும் ஒரு மனித வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டு உயிர்ச்சேதங்கள் இடம்பெற்றதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
பேருந்தை ஓட்டியும் பின்னர் சிறு வாகனம் ஒன்றின் மூலமும் இந்தத் தாக்குதல்கள் புனித ஆன்ட்ரூ இராணுவ கிறிஸ்தவக் கோவில் மீது நடத்தப்பட்டுள்ளன.







All the contents on this site are copyrighted ©.