2012-11-26 15:41:37

மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளுக்கென அனைத்துலக மையம்


நவ.26,2012. மதங்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையே உரையாடலை உருவாக்க அனைத்துலக மையம் ஒன்றை மூன்று நாடுகள் இணைந்து ஆஸ்திரியாவின் வியன்னா நகரில் இத்திங்களன்று துவக்கியுள்ளன.
மன்னர் Abdullah Bin Abdulaziz பெயரில் சவுதி அரேபியா, இஸ்பெயின் மற்றும் ஆஸ்திரியா இணைந்து உருவாக்கியுள்ள இம்மையம் பல்வேறு கலாச்சாரம் மற்றும் மதப் பின்னணிகளைக்கொண்ட மக்களிடையே பேச்சுவார்த்தைகளை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டிருக்கும்.
இந்த அனைத்துலக மையத்தினை உருவாக்குவதில் ஒத்துழைத்து, தற்போது பார்வையாளர் என்ற முறையில் செயலாற்றி வருகிறது திருப்பீடம்.
உலகின் முக்கிய மதங்களின் பிரதிநிதிகளை அங்கத்தினர்களாகக் கொண்டிருக்கும் இம்மையத்தின் நிர்வாகக் குழுவில் திருப்பீடத்தின் சார்பில், மதங்களிடையேயான திருப்பீட அவையின் செயலர் குரு Miguel Ayuso Guixot இடம்பெறுகிறார்.







All the contents on this site are copyrighted ©.