2012-11-23 15:20:53

புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும் ஒவ்வொருவருக்கும் தமிழ் நாடு அரசு 20,000 ரூபாய் அளிக்கும்


நவ.23,2012. வருகிற 2013ம் ஆண்டு புனித பூமிக்குப் பயணம் மேற்கொள்ளும் திருப்பயணிகள் ஒவ்வொருவருக்கும் தமிழ் நாடு அரசு 20,000 ரூபாய் அளிக்கும் என்று இவ்வியாழன்று அறிவிக்கப்பட்டது.
வரும் ஆண்டு ஜனவரி முதல் மேமாதம் முடிய பயணம் மேற்கொள்ளும் 500 பயணிகளுக்கு இத்தொகை வழங்கப்படும் என்றும், இத்திட்டத்தின் முதல்கட்டமாக, பல்வேறு துறவு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களுக்கு இச்சலுகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளதென UCAN செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.
தற்போதைய நிலவரப்படி, அடுத்த ஈராண்டுகளுக்கு இத்திட்டத்திற்கு 2 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதென்று கூறப்படுகிறது.
இப்பயணத்தை மேற்கொள்வதில், 70 வயதைத் தாண்டிய, நல்ல உடல் நிலையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும், ஒரு குடும்பத்தில் 4 பேர் இப்பயணத்தை மேற்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு மதங்களின் புனிதத் தலங்களுக்கு அரசு நிதி உதவிகள் வழங்கும் திட்டமானது, இந்தியாவில் குஜராத், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், தற்போது தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.