2012-11-23 15:26:05

நவம்பர் 24ம் நாளன்று ஆறு புதிய கர்தினால்களுக்குத் திருத்தந்தை தலைப்பாகை, மோதிரம்


நவ.23,2012. இந்தியாவின் சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal உட்பட 6 பேரை இச்சனிக்கிழமையன்று புதிய கர்தினால்களாகத் திருநிலைப்படுத்தவுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
வத்திக்கான் தூய பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் காலை 11 மணிக்குத் தொடங்கும் Consistory எனப்படும் புதிய கர்தினால்களின் திருநிலைப்பாடு திருவழிபாட்டில், புதிய கர்தினால்களுக்குத் தலைப்பாகை, மோதிரம் ஆகியவற்றை அணிவிப்பதோடு அவரவர்களுக்குரிய ஆலயங்களையும் அறிவிப்பார் திருத்தந்தை.
இப்புதிய கர்தினால்கள் இஞ்ஞாயிறு கிறிஸ்து அரசர் பெருவிழாவன்று திருத்தந்தையோடு சேர்ந்து திருப்பலியும் நிகழ்த்துவார்கள்.
இப்புதிய கர்தினால்களுடன் திருஅவையில் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதுக்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆக இருக்கும். பொதுவாக, கர்தினால்கள் “திருஅவையின் இளவரசர்கள்” என அழைக்கப்படுகின்றனர்.
புதிய கர்தினால்கள் : சீரோ-மலங்கரா ரீதித் திருஅவைத் தலைவர் பேராயர் Baselios Cleemis Thottunkal(53வயது), பிலிப்பீன்சின் மனிலா பேராயர் Luis Antonio Tagle(55 வயது), லெபனன் மாரனைட்ரீதித் தலைவர் பேராயர் Bechara Boutros al-Rahi (72 வயது), நைஜீரியப் பேராயர் John Onaiyekan(68 வயது), கொலம்பியப் பேராயர் Ruben Salazar Gomez (70 வயது), அமெரிக்க ஐக்கிய நாட்டுப் பேராயர் James Michael Harvey (63 வயது).
53 வயது நிரம்பிய கேரளாவின் புதிய கர்தினால் Baselios Cleemis Thottunkal திருஅவையிலுள்ள இளவயது கர்தினாலாகும்.








All the contents on this site are copyrighted ©.