2012-11-21 16:36:36

சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் புதிய பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி


நவ.21,2012 சென்னை மயிலை உயர் மறைமாவட்டத்தின் பேராயராக கடந்த ஏழு ஆண்டுகள் பணிபுரிந்த பேராயர் Malayappan Chinappa அவர்கள் பணிஓய்வு பெறுவதை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அப்பொறுப்பிற்கு, பேராயர் George Antonysamy அவர்களை இப்புதனன்று நியமித்தார்.
1937ம் ஆண்டு முகையூரில் பிறந்த பேராயர் சின்னப்பா, 1972ம் ஆண்டு சலேசிய சபை குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். இவர் 1993ம் ஆண்டு வேலூர் மறைமாவட்டத்தின் ஆயராகவும், பின்னர் 2005ம் ஆண்டு சென்னை மயிலை பேராயராகவும் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள் 1952ம் ஆண்டு திருச்சியில் பிறந்தவர். இவர் 1980ம் ஆண்டு திருச்சி மறைமாவட்டத்தின் குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார்.
2005ம் ஆண்டு பேராயராகத் திருநிலைப்படுத்தப்பட்ட இவர், Guinea நாட்டின் திருப்பீடத் தூதராக நியமிக்கப்பட்டார். பின்னர் 2008ம் ஆண்டு, இவர் Liberia, Gambia, Sierra Leone ஆகிய மூன்று நாடுகளின் திருப்பீடத் தூதராக, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களால் நியமிக்கப்பட்டார்.
60 வயது நிரம்பிய பேராயர் ஜார்ஜ் அன்டனிசாமி அவர்கள், உரோம் நகரில், மேய்ப்புப்பணி இறையியல், மற்றும் திருஅவை சட்டங்கள் ஆகிய இருதுறைகளிலும் முனைவர் பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
மேலும், விசுவாசப்பரப்புப்பணி பேராயத்தின் முக்கிய அலுவலகர்களில் ஒருவராக, பேரருள் தந்தை Camillus Nimalan Johnpillai அவர்களை, திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இப்புதனன்று நியமித்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.