2012-11-21 16:38:01

ஆப்ரிக்க நாட்டைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கை உயர்ந்ததாக உள்ளது - பெனின் நாட்டு அரசுத் தலைவர்


நவ.21,2012 ஆப்ரிக்கக் கண்டத்தில் உள்ள பெனின் என்ற நாடு சிறிய நாடுதான், ஆனால், சென்ற ஆண்டு திருத்தந்தை அங்கு பயணம் மேற்கொண்டபின்னர், எங்கள் நாடு பெரியதொரு நாடாக மாறிவிட்டது என்று பெனின் நாட்டு அரசுத் தலைவர் கூறினார்.
பெனின் அரசுத் தலைவர் Thomas Boni Yayi இத்திங்களன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்தார்.
அதன்பின், இச்செவ்வாயன்று அரசுத் தலைவர் Boni Yayi செய்தியாளர்களிடம் பேசியபோது, ஆப்ரிக்க நாட்டைக் குறித்து திருத்தந்தை கொண்டிருக்கும் நம்பிக்கை உயர்ந்ததாக உள்ளது என்றும், திருத்தந்தையின் கணிப்பு சரியானதே என்றும் கூறினார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஆப்ரிக்காவின் பெனின் நாட்டுக்குத் திருத்தந்தை பயணம் மேற்கொண்டபோது, வருங்காலத் திருஅவைக்கு ஆப்ரிக்கக் கண்டம் நம்பிக்கை தரும் ஒரு கண்டமாக அமைந்துள்ளது என்று அடிக்கடி குறிப்பிட்டார்.








All the contents on this site are copyrighted ©.