2012-11-19 16:10:00

தனிப்பட்ட அடையாளம் ஏதுமின்றி வாழும் 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மட்டில் நமது கவனம் திரும்ப வேண்டும் - சலேசிய சபையின் தலைவர்


நவ.19,2012. உலகில் 20 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் தேவையான உணவின்றி வாடுகின்றனர் என்று ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த ஒரு சமுதாய அமைப்பு கூறியுள்ளது.
‘பசிக்கெதிரான முயற்சிகள்’ (Acción contra el Hambre) என்ற அரசு சாரா ஸ்பானிய அமைப்பு வெளியிட்டுள்ள இவ்வறிக்கையில், உணவு ஏதுமின்றி உலகில்வாடும் குழந்தைகள் 5 கோடியே 50 இலட்சம் என்றும், சரியான உணவின்றி 16 கோடியே, 50 இலட்சம் குழந்தைகள் வாடுகின்றனர் என்றும் கூறப்பட்டுள்ளது.
'காணமல்போகும் குழந்தைப் பருவம்' என்ற தலைப்பில் இவ்வமைப்பினர் நடத்திவரும் விழிப்புணர்வு விளம்பரங்கள் மூலம் இக்குழந்தைகளின் வருங்காலம் பல வழிகளில் பாதிக்கப்படுவது விவரிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 20, இச்செவ்வாயன்று சிறப்பிக்கப்படும் அகில உலகக் குழந்தைகள் நாளையொட்டி, சலேசிய சபையின் தலைவர் அருள்தந்தை Pascual Chávez செய்தியொன்றை வெளியிட்டுள்ளார்.
இச்செய்தியில், எவ்வித தனிப்பட்ட அடையாளமும் இன்றி உலகெங்கும் வாழும் 5 கோடிக்கும் அதிகமான குழந்தைகள் மட்டில் நமது கவனம் திரும்ப வேண்டும் என்ற சிறப்பான அழைப்பை விடுத்துள்ளார்.








All the contents on this site are copyrighted ©.