2012-11-15 15:59:43

ஆண், பெண் என்ற அனைத்து மனித உயிர்களும் புனிதமானவை - ஆயர் Agnelo Gracias


நவ.15,2012. சட்டத்திற்குப் புறம்பாக, இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தப்பட்டுள்ள பெண் கருக்கலைப்புக் கொலைகள் பெண் சிசுக்களுக்கு எதிராக இந்தியாவில் நடைபெற்றுவரும் அநீதிகளுக்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு என்று இந்திய ஆயர் ஒருவர் கூறினார்.
மாகாராஷ்டிரா மாநிலத்தின் Beed மாவட்டத்தில் Sudam Munde, என்ற மருத்துவரும், அவரது மனைவியும் சட்டத்திற்குப் புறம்பாக செய்துள்ள கருக்கலைப்பு அறுவைச் சிகிச்சைகள் 28 வயது பெண் ஒருவரின் மரணத்தால் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
மருத்துவர் Mundeயும் அவரது மனைவியும் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் மருத்துவர் Munde பிணையத்தில் வெளிவராதவாறு உச்சநீதி மன்றம் அண்மையில் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பைக் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் குடும்ப நலப்பணி அவையின் தலைவர் ஆயர் Agnelo Gracias, ஆண், பெண் என்ற அனைத்து மனித உயிர்களும் புனிதமானவை என்று வலியுறுத்தினார்.
கருவில் வளரும் குழந்தை ஆனா, பெண்ணா என்று அறிவது, ஆண் ஆதிக்கம் கொண்ட சமுதாயத்தில் பெண்களுக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாம்தரமான இடம் போன்ற காரணங்களால் பெண் சிசுக் கொலை இந்தியாவில் தொடர்கிறது என்று ஆயர் Gracias கூறினார்.








All the contents on this site are copyrighted ©.