2012-11-14 15:54:03

சிரியாவில் காயமடைந்திருப்போர் கொள்ளை நோயைச் சந்திக்கும் ஆபத்து


நவ.14,2012. சிரியா நாட்டின் Homs நகரில் காயமடைந்திருப்போரும், வயது முதிர்ந்தோரும் கொள்ளை நோயைச் சந்திக்கும் ஆபத்தில் உள்ளனர் என்று அப்பகுதியில் பணிபுரியச் சென்றுள்ள செஞ்சிலுவைச் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் Rabab Al-Rifai கூறினார்.
Homs நகரில் இராணுவத்திற்கும், புரட்சிக் குழுக்களுக்கும் இடையே பல மாதங்களாக நிகழ்ந்துவரும் மோதல்களால், அப்பகுதியில் பணிபுரிய செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
அண்மையில் இந்தத் தடை நீக்கப்பட்டுள்ளதால், செஞ்சிலுவைச் சங்கம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவும், மருந்துகளும் எடுத்துச் சென்று பணியாற்றி வருகிறது.
அப்பகுதியில் இருக்கும் ஓர் இயேசு சபை இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள 20க்கும் அதிகமான கிறிஸ்தவர்கள் மிகவும் ஆபத்தான உடல் நிலையில் இருப்பதாகவும், இவர்கள் மூலம் அப்பகுதியில் கொள்ளை நோய் பரவும் ஆபத்து உள்ளதென்றும் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.