2012-11-13 16:08:55

பிரிட்டனில் திருமணம் செய்யாமல் இணைந்து வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு


நவ.13,2012. முறையாகத் திருமணம் செய்துகொண்டு வாழும் தம்பதிகளின் எண்ணிக்கை பிரிட்டனில் குறைந்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடுத்தர குடும்பங்களில்தான் திருமணம் செய்துகொண்டு வாழும் முறையை அனைவரும் பின்பற்றி வருகின்றனர் என, பிரிட்டனின் சமூக நீதிக்கான மையம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகின்றது.
தற்போது 50 விழுக்காட்டினர் மட்டுமே முறையாகத் திருமணம் செய்துகொள்வதாகவும், இந்நிலை தொடர்ந்தால், 2050ம் ஆண்டில் திருமணம் செய்து வாழ்வோரின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது..
பிரிட்டன் குடும்ப வாழ்க்கையை பலப்படுத்த தெளிவற்ற திட்டத்தை கையாள்வதே இந்நிலைக்குக் காரணமாகும் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.