2012-11-12 17:08:48

திருத்தந்தை : எதையும் பிறருக்குக் கொடுக்க முடியாத அளவுக்கு எவரும் ஏழையில்லை


நவ.12,2012. தன்னால் எதையும் பிறருக்குக் கொடுக்கமுடியாத அளவுக்கு எவரும் அவ்வளவு பெரிய ஏழை அல்ல என எடுத்துரைத்து, விசுவசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையே விளங்கும் ஒன்றிப்பைக்குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் விளக்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகமான 'எழைக் கைம்பெண்ணின் காணிக்கை' பற்றி தன் மூவேளை செப உரையில் எடுத்தியம்பியத் திருத்தந்தை, விசுவாசத்தின் விளைவாக வரும் தாராளமனப்பானமை, இறைவார்த்தையில் தன் முழு நம்பிக்கையைக் கொண்டிருக்கும் மக்களின் உள்மன செயல்பாடு எனவும் தெரிவித்தார்.
தன்னிடம் இருந்த இரண்டு காசுகளையும் இறைவனுக்கே காணிக்கையாக வழங்கிய கைம்பெண்ணும், இறைவாக்கினர் எலியாவுக்கு உதவிய கைம்பெண்ணும், விசுவாசத்திற்கும் பிறரன்பிற்கும் இடையிலும், மற்றும் இறையன்பிற்கும் அயலார் மீதான அன்பிற்கும் இடையிலும் விளங்கும் ஒன்றிப்பின் அடையாளமாக நிற்கின்றனர் எனவும் கூறினார் திருத்தந்தை.
ஏழைக்கைம்பெண் வழங்கிய இரு சிறு காசுகளும் பணக்காரர்கள் வழங்கிய மிகுதியான செல்வங்களை விட உயர்ந்தது என இயேசு கூறியதை எடுத்தியம்பியத் திருத்தந்தை, எந்த ஓர் இரக்கச்செயலும் அர்த்தமின்றி இருக்காது, எந்த ஒரு கருணை நடவடிக்கையும் பலனின்றிப்போகாது என உரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.