2012-11-10 16:34:15

சிரியாவில் மோதல்கள் தொடர்ந்தால், 2013ம் ஆண்டுக்குள் புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 5 இலட்சத்தை எட்டும்


நவ.10,2012. சிரியாவில் தொடர்ந்துவரும் மோதல்களால், ஜோர்டான் நாட்டிற்குள் குடியேறியுள்ள சிரியா நாட்டு புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை 2.5 இலட்சத்தை எட்டியுள்ளதாகவும், மோதல்கள் இதே வண்ணம் தொடர்ந்தால், 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் இவ்வெண்ணிக்கை 5 இலட்சத்தை எட்டும் எனவும் கவலையை வெளியிட்டுள்ளார் ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Wael Suleiman.
சிரியாவிலிருந்து ஒவ்வொரு நாளும் 400 முதல், 500 மக்கள் புலம்பெயர்ந்தோராக ஜோர்டானுக்குள் நுழைவதாகவும், இதில் 75 விழுக்காட்டினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்றும் அவர் கூறினார்.
Zaatari பாலைவனப் பகுதி முகாமில் வாழும் 40000 புலபெயர்ந்தோரும் மனித மாண்புகள் ஏதுமின்றி வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக உரைத்தார், ஜோர்டான் காரித்தாஸ் இயக்குனர் Suleiman.
சிரியாவிலிருந்து புலம்பெயர்ந்துள்ள 52,000க்கும் மேற்பட்ட மக்களிடையே, கத்தோலிக்கக் காரித்தாஸ் அமைப்பின் 120 பணியாளர்களும், 1000 சுயவிருப்பப் பணியாளர்களும் சேவை புரிந்து வரும் சூழலில், அங்குள்ள உண்மை நிலைகளைக் கண்டறிய திருத்தந்தையின் பிரதிநிதியாக, கர்தினால் Robert Sarah சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.