2012-11-07 16:17:04

உலகெங்கும் இணையதளத்தின் வசதிகள் பெருகி வந்தாலும், digital divide என்ற வேறுபாடுகள் கூடிவருகின்றன


நவ.07,2012. நலத்துறை, வேளாண்மை, தொழில்துறை, என்ற பலத் துறைகளிலும், பேரிடர் களைதல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்ற காரணங்களுக்காகவும் இணையதளம் அதிக அளவில் பயன்படுகிறது என்று ஐ.நா. உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
இணையதள ஆட்சி Internet Governance Forum (IGF), என்ற ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கு Azerbaijan நாட்டின் Baku நகரில் இப்புதனன்று ஆரம்பமானது. இம்மாநாட்டில் கலந்து கொண்ட ஐ.நா. உயர் அதிகாரி Wu Hongbo, உலகெங்கும் இணையதளத்தின் வசதிகள் பெருகி வந்தாலும், இன்னும் digital divide என்ற வேறுபாடுகள் உலகில் கூடிவருவதையும் சுட்டிக்காட்டினார்.
2011ம் ஆண்டில் உலகெங்கும் 230 கோடி மக்கள் இணையதளத்தைப் பயன்படுத்தி வந்துள்ளனர் என்று கூறிய Hongbo, வளரும் நாடுகளில் இணையதள பயன்பாடு இன்னும் பெருமளவில் குறைந்தே உள்ளது என்ற குறைபாட்டையும் சுட்டிக்காட்டினார்.
ஒரு வாரம் நடைபெறும் இக்கருத்தரங்கில் ‘மனித முன்னேற்றமும் இணையதள பயன்பாடும்’ என்ற தலைப்பில் கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன.








All the contents on this site are copyrighted ©.