2012-11-07 16:16:02

இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த எகிப்தின் புதிய அரசு எந்த முயற்சிக்கு காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் சபை முதுபெரும் தலைவர் எதிர்ப்பு


நவ.07,2012. எகிப்தில் கிறிஸ்தவர்களும் இஸ்லாமியரும் ஒரு சேர வாழ்வதால், எகிப்து அரசு இஸ்லாமிய சட்டங்களை நாட்டில் நடைமுறைப்படுத்துவது நாட்டை பல ஆண்டுகள் பின்னோக்கி அழைத்துச் செல்லும் என்று காப்டிக் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையின் புதியத் தலைவர் இரண்டாம் Anba Tawadros கூறினார்.
இஞ்ஞாயிறன்று காப்டிக் ரீதி ஆர்த்தடாக்ஸ் சபையின் தலைமைப் பொறுப்புக்குத் தெரிவு செய்யப்பட்ட இரண்டாம் Anba Tawadros பத்திரிக்கையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியில் இவ்வாறு கூறினார்.
இஸ்லாமியச் சட்டங்களை நடைமுறைப்படுத்த எகிப்தின் புதிய அரசு எடுக்கும் எந்த முயற்சியையும் தான் எதிர்க்கப்போவாதாக முதுபெரும் தலைவர் தெரிவித்தார்.
முதுபெரும் தலைவரின் கருத்துக்கு ஆதரவாகவும், அதை எதிர்த்தும் இஸ்லாமிய குழுக்கள் தங்கள் கருத்துக்களைத் தெவித்து வருவதாக, ஆசிய செய்திக் குறிப்பொன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.