2012-11-06 15:57:53

அமெரிக்க இயேசு சபை குருவுக்கு ஹிந்தி எழுத்தாளர் விருது


நவ.06,2012. ஹிந்தி மொழியில் தன் எழுத்துக்கள் மூலம் கத்தோலிக்க விசுவாசத்தை பரப்பியதற்கென அமெரிக்க இயேசு சபை குரு ஒருவருக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
Bettiah ஆயரின் செயலராகச் செயல்படும் 83 வயது அமெரிக்க இயேசு சபை குரு Jerome Durackக்கு Cherubin Barno Sahu நினைவு விருதை வழங்கி கௌரவித்தார் பாட்னா உயர் மறைமாவட்டத்தின் குரு Devasia Mattathilany.
பல்வேறு நூல்களை ஹிந்தியில் மொழிபெயர்த்துள்ள குரு Durack, மதம், மறைக்கல்வி, ஆன்மீகம், ஒழுக்கரீதி என பல்வேறு துறைகளில் ஹிந்தி மொழியில் சிறந்த படைப்புகளை வழங்கியுள்ளார்.
பாட்னாவின் பொதுநிலை கத்தோலிக்க ஹிந்தி எழுத்தாளர்களுள் முக்கியமானவரான மறைந்த எழுத்தாளர் Sahu, பல்வேறு நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள் மூலம் கத்தோலிக்க விசுவாசத்தைப் பரப்ப உதவியுள்ளார். இந்த எழுத்தாளரின் பெயரால் கடந்த நான்காண்டுகளாக ஹிந்தி கத்தோலிக்க எழுத்தாளர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.