2012-11-03 15:34:42

இந்தியாவின் ஆஜ்மீர் மறைமாவட்டத்திற்குப் புதிய ஆயர் நியமனம்


நவ.03, 2012. இந்தியாவின் ஆஜ்மீர் மறைமாவட்ட ஆயர் Ignatius Menezes நிர்வாகப் பணிகளிலிருந்து ஓய்வுப் பெறுவதைத் தொடர்ந்து, அம்மறைமாவட்டத்தின் புதிய ஆயராக Bareilly மறைமாவட்ட குரு பயஸ் தாமஸ் டி சூசாவை இச்சனிக்கிழமையன்று நியமித்துள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்தந்தை டிசூசா, மங்களூர் மறைமாவட்டத்தின் Bantwal எனுமிடத்தில் 1954ம் ஆண்டு பிறந்து 1982ம் ஆண்டு குருவாகத் திருநிலைப்படுத்தப்பட்டார். உரோம் நகர் உர்பான் பல்கலைக்கழகத்தில் திருச்சபைச் சட்டத்தில் முனைவர் பட்டமும் பெற்றுள்ளார் புதிய ஆயராக அறிவிக்கப்பட்டுள்ள அருள்தந்தை டிசூசா.
பத்து பங்குதளங்களைக் கொண்டுள்ள ஆஜ்மீர் மறைமாவட்டத்தின் 9,190 கத்தோலிக்கரிடையே 43 மறைமாவட்ட குருக்கள், 21 துறவு சபை சகோதரர்கள் மற்றும் 402 அருட்சகோதரிகள் பணியாற்றுகின்றனர்.








All the contents on this site are copyrighted ©.