Sandyசூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு கத்தோலிக்கப் பிறரன்பு
நிறுவனங்களின் உதவிகள்
நவ.01,2012. Sandy சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, குடிநீர் ஆகியவை அவசரத்
தேவை என்றும், பாதிக்கப்பட்டப் பகுதிகளை இன்னும் அடையமுடியாத நிலை இருப்பதால், மற்றத்
தேவைகளை இன்னும் சரிவரக் கணிக்க முடியவில்லை என்றும் அமெரிக்க கத்தோலிக்கப் பிறரன்பு
அமைப்பின் இயக்குனர் Kevin Hickey கூறினார். இத்திங்கள், செவ்வாய் ஆகிய இருநாட்களும்
அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையோரப் பகுதிகளில் பெரும் சேதங்களை உருவாக்கியுள்ள Sandy
சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உதவிகள் செய்யும் முயற்சி அனைத்து கத்தோலிக்கப்
பிறரன்பு நிறுவனங்களாலும் துவக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ளப் பகுதிகளை மேற்பார்வையிடுதல்,
உதவிகளை வழங்கும் நிலையங்களைப் பங்குத் தளங்களில் நிறுவுதல் ஆகியப் பணிகளில் பிறரன்பு
அமைப்பினர் தற்சமயம் ஈடுபட்டுள்ளனர். வாஷிங்டன் பகுதியில் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களால்
திறந்துவிடப்பட்டுள்ள அரங்கங்களில் வீடுகளை இழந்துள்ள 1100 பேர் தங்கியுள்ளனர் என்று
இணையதள புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. கத்தோலிக்கப் பிறரன்புப்பணி அமைப்புக்கள் எடுத்துவரும்
முயற்சிகள் போற்றுதற்குரியன என்று Camden மறைமாவட்ட முதன்மைகுரு பேரருள்திரு Roger McGrath
கூறினார்.