2012-10-30 15:31:44

சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ் அழைப்பு


அக்.30,2012. கரீபியன் பகுதி நாடான சாந்தோ தொமிங்கோவில் பெண்களுக்கு எதிராக ஆண்கள் செய்யும் வன்செயல்கள் நிறுத்தப்படுவதற்கு அழைப்பு விடுத்தார் சாந்தோ தொமிங்கோ பேராயர் கர்தினால் நிக்கொலாஸ் தெ ஹேசுஸ் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
கடந்த ஞாயிறன்று நம்பிக்கை ஆண்டை தொடங்கி வைத்த திருப்பலி மறையுரையில் இவ்வாறு கேட்டுக் கொண்ட கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ், அந்நாடு தற்போது எதிர்கொள்ளும் நெருக்கடியான சூழலிலிருந்து வெளிவருவதற்கு அனைவரும் செபிக்குமாறு கூறினார்.
கரீபியன் பகுதியை அதிகம் தாக்கிய சாண்டிப் புயலால் பாதிக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கானக் குடும்பங்களுக்கு உதவிகள் செய்யப்படுமாறு அரசை வலியுறுத்தினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.
500 ஆண்டு கிறிஸ்தவ விசுவாசத்தின் மரபைக் கொண்டுள்ள சாந்தோ தொமிங்கோவில், இன்று அவ்விசுவாசம் வாழப்படவில்லை என்றும் கூறினார் கர்தினால் லோப்பெஸ் ரொட்ரிக்கெஸ்.








All the contents on this site are copyrighted ©.