2012-10-30 15:45:12

இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்ப்ட அழைப்பு


அக்.30, 2012. இந்தோனேசியாவில் சிறுபான்மை மதத்தவரின் உரிமைகள் மதிக்கப்பட்டு நிலைநாட்டப்பட அந்நாட்டு அரசுத்தலைவரை வலியுறுத்துமாறு இங்கிலாந்து பிரதமருக்கும் வெளியுறவு அமைச்சருக்கும் கடிதங்களை அனுப்பியுள்ளது அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாடு என்ற உரிமைகள் அமைப்பு.
மேற்கு பாப்புவா பகுதியில் இடம்பெற்றுவரும் மனித உரிமை மீறல்களும் மத சகிப்பற்ற தன்மைகளும் இந்தோனேசியாவின் மக்களாட்சி வளர்ச்சிக்கு அச்சுறுத்தலாக உள்ளன என, கடிதங்களில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.
தீவிரவாதிகளின் அச்சுறுத்தலைத் தொடர்ந்து இந்தோனேசிய அரசு அதிகாரிகளால் கோவில்கள் வலுக்கட்டாயமாக மூடப்பட்டுவருவது குறித்தும் அனைத்துலக கிறிஸ்தவ ஒருமைப்பாட்டு அமைப்பு தன் கவலையை வெளியிட்டுள்ளது.
இங்கிலாந்திற்கான இந்தோனேசிய அரசுத்தலைவர் Susilo Bambang Yudhoyonoவின் அரசுப்பயணத்தின்போது அந்நாட்டின் மத உரிமைகள் குறித்து பிரித்தானியப் பிரதமரும் வெளியுறவு அமைச்சரும் வலியுறுத்த வேண்டும் என இந்த உரிமை அமைப்பு விண்ணப்பித்துள்ளது.








All the contents on this site are copyrighted ©.