2012-10-29 15:42:00

இந்தோனேசியாவில் முதல் தேசிய இளையோர் தினம்


அக்.29,2012. "நூறு விழுக்காடு கத்தோலிக்கர், நூறு விழுக்காடு இந்தோனேசியர்" என்ற விருதுவாக்குடன், இந்தோனேசியாவில் கடந்த வாரத்தில் நடைபெற்ற முதல் இந்தோனேசிய இளையோர் தினத்தில் ஆயிரக்கணக்கான இளையோர் கலந்து கொண்டனர்.
இம்மாதம் 20 முதல் 26 வரை Borneo தீவின் மேற்கு Kalimantan மாநிலத்தில் Sanggau மறைமாவட்டத்தில் நடைபெற்ற இந்த இளையோர் தினத்தில், அந்நாட்டின் 35 மறைமாவட்டங்களைச் சேர்ந்த சுமார் இரண்டாயிரம் பேர் கலந்து கொண்டனர்.
பல கலாச்சார, பல இன, பல மொழிகளைக் கொண்ட இந்தோனேசியாவில், அன்றாட வாழ்வில் கத்தோலிக்க விசுவாசத்தை வாழும் முறையை இளையோர் அறிந்து கொண்டனர் என்று, முதல் தேசிய இளையோர் தின இயக்குனர் அருள்பணி Yohanes Dwi Harsanto கூறினார்.
அனைத்துலக கத்தோலிக்க இளையோர் தினம், 2013ம் ஆண்டு ஜூலையில் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறவுள்ளது.







All the contents on this site are copyrighted ©.