2012-10-25 16:27:54

புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி


அக்.25,2012. புனித பூமியில் உள்ள இயேசு பிறப்பு பேராலயத்திற்கு பிரான்ஸ் நாடு 200000 யூரோக்கள் நிதி உதவி வழங்கியுள்ளது.
உலகின் மிகப் பழமையான கோவில் என்று கருதப்படும் இயேசு பிறப்புப் பேராலயம் அழியும் ஆபத்துள்ள உலக நினைவுச் சின்னங்களில் ஒன்று என்று UNESCOவால் அறிவிக்கப்பட்ட ஒரு கோவில்.
இக்கோவிலின் கூரைப்பகுதியை சீர் செய்யும் பணிக்கென பிரான்ஸ் பாராளுமன்றம் இந்த நிதி உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளது.
புனித பூமியில் உள்ள கோவில்களுக்கும், பிரான்ஸ் நாட்டுக்கும் உள்ள உறைவை வெளிப்படுத்தும் ஓர் அடையாளமே இந்த நிதி உதவி என்று எருசலேமில் உள்ள பிரான்ஸ் நாட்டு தூதர் Frédéric Desagneaux கூறினார்.








All the contents on this site are copyrighted ©.