2012-10-25 16:27:30

Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள்


அக்.25,2012. Skype எனப்படும் கணணித் தொடர்பின் வழியே செபமாலை செபிக்கும் குழுக்கள் அண்மையில் உலகில் துவக்கப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட நேரத்தில் Skype வசதி கொண்டவர்கள் 8 முதல் 10 பேர் என்ற அளவில் கணணி வழியே தொடர்பு கொண்டு, செபமாலையை செபிக்கின்றனர் என்று இவ்வசதியை ஒருங்கிணைக்கும் Kinga Sólyomné Székely, ICN கத்தோலிக்க செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
செபத்தில் ஈடுபடுவோர் வழியாகவே இவ்வுலகின் பிரச்சனைகளைத் தீர்க்கமுடியும் என்று அருளாளர் திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் கூறியதை விருதுவாக்காகக் கொண்டு இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சொல்லப்படுகிறது.
'செபமாலையின் திருத்தூதர்' என்று அழைக்கப்படும் மறைந்த அருள்தந்தை Petrusz Pavlicek, செபமாலையின் மணிகள் ஒரு சேர இணைக்கப்பட்டிருப்பதுபோல, உலகின் வடதுருவம் முதல் தென் துருவம் வரை மக்கள் செபத்தால் இணைவதற்கு செபமாலையே சிறந்த வழி என்று கூறியுள்ளதை நனவாக்க இம்முயற்சி என்று அமைப்பாளர் Székely கூறினார்.
இம்முயற்சியில் ஈடுபட விழைவோர் theholyrosaryprayer@gmail.com என்ற மின்னஞ்சல் மூலம் மேலும் விவரங்களைப் பெற முடியும்.








All the contents on this site are copyrighted ©.