அக்.23,2012. லாவோஸ் நாட்டில் கிறிஸ்தவர்கள் பூர்வீகமத வழிபாடுகளை நடத்த மறுத்தால் அவர்களின்
வீடுகள் அழிக்கப்படும் என்ற அச்சுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளதாக பிதெஸ் செய்தி நிறுவனம்
கூறியது. லாவோஸ் நாட்டின் Savannakhet மாநிலத்தின் சில அரசு அதிகாரிகள், Seekaew கிராமத்திலுள்ள
கிறிஸ்தவர்களை இவ்வாறு அச்சுறுத்தியிருப்பதாக பிதெஸ் செய்தி நிறுவனம் மேலும் கூறியது. "லாவோஸ்
சமய சுதந்திரத்துக்கான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு(HRWLRF) " என்ற அரசு சாரா அமைப்பு
வெளியிட்டுள்ள செய்தியில், Seekaew கிராமத்தின் ஐம்பதுக்கும் மேற்பட்ட கிறிஸ்தவர்கள்,
அப்பகுதியின் பராம்பரியப் பூர்வீக மத மரபுகளைக் கடைப்பிடித்து, புனித நீரைக் குடிக்குமாறு
அக்கிராமத்தின் முதியோரால் கட்டாயப்படுத்தப்படுகின்றனர் எனக் கூறப்பட்டுள்ளது.