2012-10-22 16:12:31

கந்தமால் வன்முறையாளர்கள் தண்டனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதற்கு ஒடிஸ்ஸா மாநில அரசு விளக்கம் அளிக்கவேண்டும் - இந்திய உச்சநீதி மன்றம்


அக்.22,2012. இந்தியாவின் ஒடிஸ்ஸா மாநிலத்தைச் சேர்ந்த கந்தமால் பகுதியில் 2008ம் ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு எதிராக நிகழ்ந்த வன்முறைகளில் ஈடுபட்ட பலர் தண்டனைகள் ஏதுமின்றி விடுவிக்கப்பட்டதற்கு ஒடிஸ்ஸா மாநில அரசும், காவல் துறையும் விளக்கம் அளிக்கவேண்டும் என்று இந்திய உச்சநீதி மன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"Initiative for justice, peace and human rights" என்ற ஓர் அரசு சாரா அமைப்பு அளித்த புகாரின் அடிப்படையில் உச்சநீதி மன்றம் இந்த உத்தவைப் பிறப்பித்துள்ளது என்று சொல்லப்படுகிறது.
இந்த வன்முறைகளின்போது பதிவான 185 புகார்களில், 121 புகார்களில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சரியான விசாரணைகள் இன்றி விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று இவ்வமைப்பினர் கூறியதைத் தொடர்ந்து, ஒடிஸ்ஸா முதல்வர் Naveen Patnaik மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் விளக்கம் அளிக்கவேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறியுள்ளது.
வன்முறைகளுக்குப் பலியான கிறிஸ்தவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக மேற்கொண்டுள்ள போராட்டத்திற்கு நம்பிக்கை தரும் ஒரு பதிலாக, உச்சநீதி மன்றத்தின் இந்த ஆணை அமைந்துள்ளது என்று அகில உலக இந்தியக் கிறிஸ்தவர்கள் அமைப்பின் தலைவர் Sajan George கூறியுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.