2012-10-19 15:45:06

இந்தோனேசியாவில் முஸ்லீம்களின் வலியுறுத்தலினால் 9 ஆலயங்கள் மூடப்ப்ட்டுள்ளன


அக்.19,2012. இந்தோனேசியாவின் சுமத்ரா தீவின் Banda Aceh நகரத்தில் 9 பிரிந்த கிறிஸ்தவசபை ஆலயங்கள் மற்றும் 6 புத்தமத பகோடாக்களை மூடியுள்ளனர் அதிகாரிகள்.
இந்நடவடிக்கை குறித்துப் பேசிய Aceh நகர் துணை மேயர் Hajjah Illiza Sa'aduddin Djamal, ஒரு இலட்சத்து 75 ஆயிரம் பேர் வாழும் இந்நகரத்தில் ஷாரியா என்ற இசுலாமியச் சட்டம் அமலில் இருக்கின்றது மற்றும் சட்டரீதியான அனுமதியின்றி இவ்வாலயங்கள் கட்டப்பட்டுள்ளன என்று கூறினார்.
ஆயினும், அப்பகுதி முஸ்லீம்கள் கொடுத்த அழுத்தத்தினால் இவ்வாலயங்கள் மூடப்பட்டுள்ளன என்று உள்ளூர் வட்டாரங்கள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.