2012-10-18 15:37:52

உலகத்தரப் பட்டியலில் டில்லி, மும்பை


அக்.18,2012. ஐ.நா., வெளியிட்டுள்ள உலகத்தரம் வாய்ந்த நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் டில்லியும், மும்பையும் இடம்பெற்றுள்ளன.
95 நாடுகளைக் கொண்ட இந்தப் பட்டியலில் மும்பை 52வது இடத்திலும், டில்லி 58வது இடத்திலும் உள்ளன.
ஷங்காய், பீஜிங் மற்றும் பாங்காக் ஆகிய நகரங்கள் இப்பட்டியலில் முன்னணியில் உள்ளன. இருப்பினும் காத்மண்டு மற்றும் டாக்கா ஆகியன இந்திய நகரங்களுக்கு கீழாகவே உள்ளன.
உற்பத்தி, உள்கட்டமைப்பு, வாழ்க்கைத்தரம், சுற்றுசூழல் மற்றும் அதனைப் பேணும் முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.