2012-10-18 15:33:41

Rimsha Masihன் வழக்கு விசாரணை நவம்பர் 14ம் தேதிக்கு ஒத்திவைப்பு


அக்.18,2012. பாகிஸ்தானில் தற்போது நிலவும் பதட்டமானச் சூழலின் விளைவாக இஸ்லாமாபாதில் உள்ள உயர் நீதி மன்றம் Rimsha Masihன் வழக்கு விசாரணையை நவம்பர் மாதம் 14ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.
தேவநிந்தனை சட்டத்தின் கீழ் ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையத்தில் விடுவிக்கப்பட்ட சிறுமி Rimsha Masihயின் வழக்கைத் தள்ளுபடி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இம்முயற்சிகளுக்கு எதிர்ப்பாக, கடந்த வெள்ளி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் கராச்சியில் உள்ள புனித பிரான்சிஸ் சேவியர் கத்தோலிக்கக் கோவிலும், பைசலாபாதில் உள்ள ஒரு கிறிஸ்தவ கோவிலும் தாக்கப்பட்டுள்ளன.
குரான் பக்கங்களை எரித்து, சிறுமி Rimsha Masihயின் பையில் வைத்த இஸ்லாமிய போதகர் பிணையத்தில் விடுதலைச் செய்யப்பட்டுள்ளது, பாகிஸ்தானில் நிலவும் தேவநிந்தனை என்ற கறுப்புச் சட்டத்தின் அநீதியை வெளிப்படுத்தும் அடையாளம் என்று சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு தற்போது இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வரும் Malala Yousafzai என்ற பெண்ணுக்காக நடைபெற்ற சிறப்பு வழிபாட்டின்போது கிறிஸ்தவக் கோவில் தாக்கப்பட்டது பெரும் வேதனையைத் தருகிறது என்று கிறிஸ்தவ வழக்கறிஞர் Joel Aamir கூறினார்.
சில அடிப்படைவாத இஸ்லாமிய மதத் தலைவர்களால் மக்கள் தவறான பாதையில் வழிநடத்தப்படுவதால், பாகிஸ்தானில் சகிப்புத்தன்மை வெகுவாகக் குறைந்து வருகிறது என்று பைசலாபாத் நீதி, அமைதி குழுவின் இயக்குனர் அருள்தந்தை Nisar Barkat ஆசிய செய்தி நிறுவனத்திடம் கூறினார்.








All the contents on this site are copyrighted ©.