2012-10-17 15:44:19

மாமன்றத் தந்தையர்கள் : திருஅவையின் பக்த இயக்கங்கள் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் புது வசந்தம்


அக்.17,2012. திருஅவையின் அருங்கொடை இயக்கங்களும், அடிப்படைக் கிறிஸ்தவச் சமூகங்களும், பக்தசபைகளும் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் புது வசந்தங்களாக இருக்கின்றன என்று ஆயர்கள் மாமன்றத் தந்தையர் இப்புதன் காலையின் 15வது பொது அமர்வில் கூறினர்.
திருஅவையில் இந்த இயக்கங்கள் நன்கு வரவேற்கப்பட்டு ஊக்கப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறிய மாமன்றத் தந்தையர், தற்போதைய பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணப்படுமாறும் கேட்டுக்கொண்டனர்.
வத்திக்கானில் இரண்டாவது வாரமாக நடைபெற்றுவரும் 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் 15வது பொது அமர்வு Kinshasa பேராயர் கர்தினால் Laurent Mosengwo Pasinya தலைமையில் தொடங்கியது. 252 மாமன்றத் தந்தையர்கள் கலந்து கொண்ட இப்பொது அமர்வில் 22 மாமன்றத் தந்தையர்கள் உரையாற்றினர்.
இப்புதன் மாலை 16வது பொது அமர்வில், இந்த ஆயர்கள் மாமன்றத்தின் பொதுத் தொடர்பாளர் வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald Wuerl சமர்ப்பிக்கும் அறிக்கை குறித்த விவாதங்கள் இடம் பெற்றன.
மேலும், புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி குறித்து வத்திக்கானில் நடைபெற்றுவரும் பேசிய, பங்குத்தளங்களே, புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்கு முக்கிய இயக்கிகளாக இருப்பவை என்று பேசிய நைஜீரிய ஆயர் Emmanuel Badejo, பங்குகளைத் துடிப்புடன் வைக்கவேண்டியது தலத்திருஅவைகளின் கடமை என்பதை வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.