ஆஸ்திரேலிய ஓர் இயேசு சபை அருள்தந்தை உலகின் வயதான பள்ளி ஆசிரியர்
அக்.16,2012. ஆஸ்திரேலிய இயேசு சபை அருள்தந்தை Geoffrey Schneider, உலகின் வயதான பள்ளி
ஆசிரியர் எனப் பெயர்பெற்று கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார். சிட்னியின் புனித அலாய்சியஸ்
கல்லூரியின் ஜூனியர் பள்ளியில் 47 ஆண்டுகளாக ஆசிரியப் பணியாற்றும் அருள்தந்தை Geoffrey
Schneider, வருகிற டிசம்பரில் நூறு வயதை எட்டவுள்ளார் என்றும், ஆசிரியப்பணியிலிருந்து
ஓய்வுபெறும் எண்ணம் அவருக்கு இல்லை என்றும் ஊடகங்கள் கூறுகின்றன. தனது ஆசிரியப்பணியின்
வெற்றிக்குப் பொறுமையே காரணம் எனவும், தவறான காரியங்கள் நடந்தால் கத்தாமல், அமைதியாக
விவகாரங்களைக் கைக்கொண்டால் அவை தானாக அமைதியாகிவிடும் எனவும் இயேசு சபை அருள்தந்தை Schneider
கூறியுள்ளார்.