2012-10-15 16:50:11

உரோமையில் Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக் கூட்டம்


அக்.15,2012. பிரான்ஸ் நாட்டு Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழுவின் ஐரோப்பிய இளையோர் மற்றும் வயதுவந்தோர்க்கான கூட்டம் வருகிற டிசம்பர் 28 முதல் சனவரி 2 வரை உரோமையில் நடைபெறவிருக்கின்றது.
இக்கூட்டத்தின்போது திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களைச் சந்திப்பதும் இடம்பெறும்.
கத்தோலிக்கர், ஆர்த்தடாக்ஸ் மற்றும் பிரிந்த கிறிஸ்தவ சபையினரைக் கொண்ட இந்த Taizé கிறிஸ்தவ ஒன்றிப்புக்குழு, உலகம் போரினால் பிளவுண்டிருந்த சமயம் 1940ம் ஆண்டில் சகோதரர் ரோஜெர் என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது







All the contents on this site are copyrighted ©.