2012-10-13 16:10:26

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்ட 14 வயதுச் சிறுமி குணமடைய செபம்


அக்.13,2012. தலிபான்களால் தாங்கள் எதிர்கொள்ளும் துன்பங்களைத் தனது தினசரிக் குறிப்பேட்டில் எழுதி, சிறுமிகளின் கல்விக்காக முயற்சித்த பாகிஸ்தான் நாட்டு 14 வயதுச் சிறுமி Malala Yousafzai தலிபான்களால் சுடப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும்வேளை, அச்சிறுமி விரைவில் குணம்பெறுவதற்கு அந்நாட்டினர் இவ்வெள்ளியன்று செபித்தனர்.
மேலும், பாகிஸ்தானின் கராச்சியில் தேவநிந்தனைச் சட்டத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ள 15 வயது கிறிஸ்தவச் சிறுவன் Ryan Brian Patus குறித்து கவலை வெளியிட்டுள்ளனர் அந்நாட்டுக் கிறிஸ்தவர்கள். இசுலாமிய அடிப்படைவாதிகளால் இச்சிறுவனின் வீடு தீ வைக்கப்பட்டுள்ளதுடன் அவனது குடும்பமும் துன்பத்துக்குள்ளாகியுள்ளது.
தனக்கு வந்த எஸ்.எம்.எஸ். செய்தியை என்னவென்றே அறியாமல் மற்றவர்களுக்கு அனுப்பியதாக அச்சிறுவன் கூறியுள்ளான்.
பாகிஸ்தானில் இந்த ஆண்டில் மட்டும் ரிம்ஷா மாசிக் உட்பட 22 பேர் தேவநிந்தனைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, ரிம்ஷா மாசிக் பொய்யாகக் குற்றம்சாட்டப்படக் காரணமான முஸ்லீம் குரு சிறையிலிருந்து பிணையலில் வெளிவந்துள்ளார் எனச் செய்திகள் கூறுகின்றன.







All the contents on this site are copyrighted ©.