2012-10-12 16:35:59

குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட ஐ.நா. அழைப்பு


அக்.12,2012. குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்படுவதற்கும், இந்தக் கொடுமையான பழக்கத்திலிருந்து சிறுமிகளைப் பாதுகாப்பதற்கும் சிறந்த யுக்திகளில் ஒன்றாக கல்வி இருக்கின்றது என ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன் கூறினார்.
இவ்வியாழனன்று முதல் அனைத்துலகச் சிறுமிகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி செய்தி வெளியிட்ட பான் கி மூன், சிறுமிகள், மணப்பெண்களாக இல்லாமல் சிறுமிகளாக இருப்பதற்கு நம்மால் இயன்ற அனைத்தையும் செய்வோம் எனக் கேட்டுக்கொண்டார்.
இன்று உலகில் 18 வயதுக்குட்பட்ட ஏறக்குறைய 7 கோடிப் பெண்கள் திருமணமானவர்கள் என ஐ.நா. புள்ளிவிபரம் ஒன்று கூறுகிறது.








All the contents on this site are copyrighted ©.