2012-10-12 16:31:13

இஸ்தான்புல் அனைத்துலக கருத்தரங்கில் திருப்பீடம்


அக்.12,2012. “நீதியும் புதிய உலக ஒழுங்கமைவை அமைத்தலும்” என்ற தலைப்பில் துருக்கி நாட்டுத் தலைநகர் இஸ்தான்புலில் இச்சனிக்கிழமையன்று தொடங்கும் இரண்டு நாள் அனைத்துலக கருத்தரங்கில் திருப்பீடமும் கலந்து கொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பல அரபு நாடுகளில் புரட்சிகள் இடம்பெற்றுள்ள சூழலில், நீதி, சமத்துவம், பிரதிநிதித்துவம், மாண்பு ஆகியவைகள் உலகில் அர்த்தமுள்ள முறையில் இடம்பெறும் வழிகள் இக்கருத்தரங்கில் கலந்து பேசப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
துருக்கி நாட்டுக்கானத் திருப்பீடத் தூதர் பேராயர் Antonio Lucibello, திருப்பீட பல்சமய உரையாடல் அவையின் செயலர் அருள்பணி Miguel Ángel Ayuso Guixot, இன்னும் பிற கிறிஸ்தவசபைகள், சமயத் தலைவர்கள், அரசியல்வாதிகள், கல்வியாளர்கள், கலைஞர்கள், வணிகர்கள் எனப் பலதரப்பட்ட நிலையினர் இதில் கலந்து கொள்வார்கள்.
நீதி, உலக ஒழுங்குமுறை, அரசியல், வரலாறு, பொருளாதாரம், கலை எனப் பல்வேறு தலைப்புகள் இதில் விவாதிக்கப்படும்.







All the contents on this site are copyrighted ©.