2012-10-11 15:34:01

கருக்கலைப்பு மற்றும் பெண்சிசுக்கொலைகள் தொடர்பாக இந்தியாவில் 30 இலட்சம் பெண்கள் காணாமல் போயுள்ளனர்


அக். 11, 2012. பெண்குழந்தைகளைக் கருவிலேயே கண்டறிந்து கொல்லுதல் மற்றும் பெண் சிசுக்கொலைகள் காரணமாக இந்தியாவில் கடந்த ஆண்டில் மட்டும் 30 இலட்சம் சிறுமிகள் காணாமல் போயுள்ளதாக வாழ்விற்கான பாப்பிறைக் கழகத்தின் உறுப்பினர் Pascoal Carvalho கூறினார்.
பெண் சிசுக்கொலைகள் குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ளபுள்ளி விவரக் கணக்கைச் சுட்டிக்காட்டிய Carvalho, இந்தியாவில் பெண்களுக்கு எதிராக மதம், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களில் காணப்படும் போக்குகளே இதற்கு முக்கியக் காரணங்களாக இருந்துள்ளனஎன்றார்.
கருக்கலைப்பும் பெண்சிசுக்கொலையும் மரணக்கலாச்சாரத்தின் வெளிப்பாடு எனவும் கூறினார் அவர்.
இந்நிலை தொடர்ந்தால், இன்னும் 20 ஆண்டுகளில் மணப்பெண்களுக்கு பெருமளவில் பற்றாக்குறை ஏற்படும் என்ற வாழ்விற்கான பாப்பிறைக்கழக உறுப்பினர் Carvalho, வாழ்வுக் கலாச்சாரத்தை எப்போதும் ஊக்குவிக்கும் திருஅவை, பெண்களுக்கான கல்வி, நல ஆதரவு, முன்னேற்றம் மற்றும் வாழ்வை என்றும் வலியுறுத்தி வருகிறது எனவும் தெரிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.