2012-10-10 15:32:13

அனைத்துலக மரண தண்டனை எதிர்ப்பு தினம்


அக்.10,2012. மரண தண்டனையை இரத்து செய்ய வேண்டும் என உலகின் பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வருவதை வரவேற்கும் அதேவேளை, மரண தண்டனையை இன்னும் நிறைவேற்றும் நாடுகள் அதனை இரத்து செய்யுமாறு ஐ.நா.பொதுச்செயலர் பான் கி மூன் கேட்டுக் கொண்டுள்ளார்.
அக்டோபர் 10, இப்புதனன்று அனைத்துலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி பிரான்சில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒலி-ஒளிச் செய்தி அனுப்பிய பான் கி மூன், மரண தண்டனை நிறைவேற்றுவது, வாழ்வதற்கான உரிமை உட்பட அனைத்து மனித உரிமைகளுக்கும் எதிரானது என்று பேசினார்.
தற்போது உலகில் 155 நாடுகள் தங்களது அரசியல் அமைப்பிலிருந்து மரண தண்டனையை நீக்கியுள்ளன மற்றும் கடந்த 10 ஆண்டுகளில் இத்தண்டனையை நிறைவேற்றாமலும் இருக்கின்றன என்றும் ஐ.நா.பொதுச்செயலர் குறிப்பிட்டுள்ளார்.







All the contents on this site are copyrighted ©.