2012-10-10 15:22:41

13வது உலக ஆயர்கள் மாமன்றம் : திருஅவையில் பெண்களின் பங்கு


அக்.10,2012. திருஅவையில் பெண்களின் பங்கு, சுற்றுச்சூழலில் புதிய நற்செய்தி அறிவிப்புப்பணியின் முக்கியத்துவம், விசுவாசத்துக்கும் கலாச்சாரத்துக்கும் இடையே உரையாடல் உட்பட பல தலைப்புக்களில் இச்செவ்வாய் மாலை பொது அமர்வில் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றன.
திருஅவையில் மூன்றில் இரண்டு பகுதியினர் பெண்களாக இருக்கின்றபோதிலும், அவர்களில் பலர் தாங்கள் பாகுபடுத்தப்படுவதாக உணர்வதால், பெண்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படாததற்கான காரணம் தெளிவாக விளக்கப்பட வேண்டும் என இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
பெண்கள் திறமையற்றவர்கள் அல்லது தகுதியற்றவர்கள் எனபதற்காக அவர்கள் குருக்களாகத் திருநிலைப்படுத்தப்படவில்லை என்பது அர்த்தமல்ல, மாறாக, குருவானவர், மனித சமுதாயத்தை மணப்பதற்காக இவ்வுலகுக்கு வந்த கிறிஸ்துவின் பிரதிநிதி என்பது மட்டுமே காரணம் என்றும் இப்பொது அமர்வில் கூறப்பட்டது.
எனவே புதிய நற்செய்தி அறிவிப்புப்பணிக்குப் பெண்களின் முக்கியத்துவம் தெளிவாகக் குறிக்கப்பட வேண்டும், ஏனெனில், திருஅவையில் தங்களது இருப்பையும் தங்களது பங்கையும் மகிழ்ச்சியோடு ஏற்கும் பெண்கள் இன்றி புதிய நற்செய்தி அறிவிப்புப்பணி செய்வது இயலாத ஒன்று எனவும் இச்செவ்வாய் பொது அமர்வில் மாமன்றத் தந்தையர் கூறினர்







All the contents on this site are copyrighted ©.