2012-10-09 16:38:16

கர்தினால் Wuerl : நற்செய்தி அறிவிப்புப்பணி இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாக அமைய வேண்டும்


அக்.09,2012. 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் இரண்டாவது பொது அமர்வில் இத்திங்கள் மாலை உரையாற்றிய வாஷிங்டன் பேராயர் கர்தினால் Donald W. Wuerl, விசுவாசம் இன்றைய காலத்துக்குப் பொருத்தமாக இருக்கும் விதத்தைக் கத்தோலிக்கத் திருஅவையிலிருந்து விலகியிருப்பவர்களுக்கு காட்டுவதற்கு முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.
இக்காலத்தில் நற்செய்தி அறிவிப்புப்பணி எதிர்கொள்ளும் சவால்கள் குறித்துப் பேசிய கர்தினால் Wuerl, நற்செய்தி அறிவிப்புப்பணி, திருஅவையின் பாரம்பரிய விசுவாச வாழ்வில் வேரூன்றப்பட்டதாய், இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதாக இருக்க வேண்டும் என்றுரைத்தார்.
இலத்தீனில் 45 நிமிடங்களுக்குமேல் உரையாற்றிய கர்தினால் Wuerl, உலகின் எல்லாப் பகுதிகளையும் உலகப்போக்கின் சுனாமி அடித்துச் சென்று, கடவுளின் இருப்பை மறுக்கின்ற போக்கை விட்டுள்ளது என்றும் கூறினார்.
மனிதராக இருப்பது என்பதன் புரிந்து கொள்ளுதலே கடவுள் இன்றி திசைமாறும் என்றும் அவர் ஆயர்கள் மாமன்றத்தில் எடுத்துரைத்தார்.







All the contents on this site are copyrighted ©.