2012-10-08 16:55:58

கர்தினால் ஹான் : ஹாங்காங்கில் கத்தோலிக்கரின் நற்செய்திப்பணி


அக்.08,2012. மேலும், இத்திங்களன்று தொடங்கியுள்ள 13வது உலக ஆயர்கள் மாமன்றத்தின் முதல் பொது அமர்வில் முதலில் உரையாற்றிய இம்மாமன்றத் தலைவர் பிரதிநிதி ஹாங்காங் ஆயர் கர்தினால் John Tong Hon, 1997ம் ஆண்டில் சீனாவிடம் திரும்புவதற்கு முன்னர், கம்யூனிச ஆட்சியால் ஹாங்காங்கின் இறையாண்மை அந்நகரில் சந்தித்த நெருக்கடி குறித்து விளக்கினார்.
நெருக்கடி என்ற சொல் சீன மொழியில் ஆபத்து, வாய்ப்பு ஆகிய இரண்டு பண்புகளால் குறிக்கப்பட்டுள்ளது என்றும், பாதுகாப்பற்ற நெருக்கடியை அனுபவித்த கத்தோலிக்கரல்லாத மக்களும் தலத்திருஅவையிடம் ஆன்மீக ஆறுதலுக்கு வந்தனர் என்றும் கர்தினால் ஹான் விளக்கினார்.
இந்த உலக ஆயர்கள் மாமன்றத்திற்குத் தங்களை அழைத்ததற்குத் திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்த கர்தினால், ஆதிக் கிறிஸ்தவ சமூகத்தில் விளங்கிய கோட்பாடு, பல்வேறு நிலைகளில் ஒன்றிப்பு, சேவை ஆகிய மூன்று பண்புகள் ஹாங்காங், மக்காவோ மற்றும் சீனாவில் கத்தோலிக்கரிடையே வெளிப்படுவதையும் விளக்கினார். இன்னும், இந்த ஆயர்கள் மாமன்றத்தில் உலக ஆயர்கள் மாமன்றப் பொதுச் செயலர் பேராயர் நிக்கோலா எத்ரோவிச்சும் விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.
12 மற்றும் 13வது ஆயர்கள் மாமன்றங்களுக்கு இடையே இடம்பெற்ற நடவடிக்கைகள், 13வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புகள், உலக ஆயர்கள் மாமன்றச் செயலகத்தின் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பேராயர் எத்ரோவிச் விரிவான அறிக்கை சமர்ப்பித்தார்.







All the contents on this site are copyrighted ©.