2012-10-06 15:38:30

இந்தியாவில் ஊழலற்ற திருச்சபையை உருவாக்குவதற்கு கிறிஸ்தவத் தலைவர்கள்


அக்.06,2012. இந்தியாவில் ஊழலற்ற திருச்சபையையும் சமூகத்தையும் உருவாக்குவதற்கான வழிகளை ஆய்வு செய்யும் நோக்கத்தில் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த ஏறக்குறைய 70 தலைவர்கள் பங்களூருவில் இரண்டு நாள் கூட்டம் ஒன்றை நடத்தினர்.
“இந்தியத் திருச்சபைகளில் ஊழல்” என்ற தலைப்பில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கத்தோலிக்கத் திருஅவை, பிரிந்த கிறிஸ்தவ சபை, ஆர்த்தடாக்ஸ் சபை, கிறிஸ்தவ ஒன்றிப்பு சபை, இவாஞ்சலிக்கல் சபைகள் எனப் பல்வேறு கிறிஸ்தவ சபைகளைச் சார்ந்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.
திருஅவையின் உயர்மட்டத் தலைமைத்துவத்துக்கு உதவும் நோக்கத்தில் 2010ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட “கிறிஸ்தவ வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்கள்” இயக்கம் இக்கூட்டத்தை நடத்தியது.
விவிலியத்துக்குச் சான்று பகர்தல், ஒடுக்கப்பட்டோருக்கு விடுதலையளித்தல், நீதியும் ஊழலுமற்ற சமூகத்தை உருவாக்குதல் ஆகியவை திருஅவையின் மறைப்பணிகள் என்று இக்கூட்டத்தில் கூறினர் கிறிஸ்தவத் தலைவர்கள்.







All the contents on this site are copyrighted ©.