2012-10-04 16:59:01

பெண்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதில் இந்தியா வெற்றி கண்டுள்ளது


அக்.04, 2012. பாராளுமன்றத்திலும், நாட்டின் முக்கிய முடிவுகளை எடுக்கும் துறைகளிலும் பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்துச் செயல்பட இந்தியாவை ஒரு முன்னுதாரணமாக ஏனைய நாடுகள் கொள்ளவேண்டும் என அழைப்பு விடுத்தார் ஐநா அதிகாரி ஒருவர்.
இந்தியப் பாராளுமன்ற அவையின் பெண் அங்கத்தினர்களைக் கொண்ட ஓர் அவைக்கூட்டத்தில் உரையாற்றிய ஐநா வின் ஆண்பெண் சரிநிகர் நிலைகளுக்கான அமைப்பின் உயர் இயக்குனர் Michelle Bachelet, பெண்களுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதில் இந்தியா குறிப்பிடத்தகும் வெற்றி கண்டுள்ளது எனப் பாராட்டினார்.
பத்தாண்டுகளுக்கு முன்னர் இந்தியாவின் கிராமப்புற நிர்வாக அவைகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுள் 10 விழுக்காட்டிற்கும் குறைவானவரே பெண்களாக இருந்தனர், தற்போது அது 40 விழுக்காட்டிற்கும் அதிகமாக வளர்ந்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டி தன் மகிழ்ச்சியை வெளியிட்டார் ஐநா அதிகாரி Bachelet.








All the contents on this site are copyrighted ©.