2012-10-02 14:42:37

கவிதைக் கனவுகள் - நாமக்கல் கவிஞரின் காந்தி அஞ்சலி!


காந்தியைப் போல் அதிகாலை விழிக்க வேண்டும்
கடவுளென்ற கருணையை நாம் கருத வேண்டும்
காந்தியைப் போல் காற்றாட உலவ வேண்டும்
களைதீரக் குளிர் நீரில் முழுக வேண்டும்
காந்தியைப் போல் அளவாகப் புசிக்க வேண்டும்
கண்டதெல்லாம் தின்னாமை காக்க வேண்டும்
காந்தியைப் போல் ஒழுங்காகத் திட்டம்போட்டு
காரியங்கள் செய்முறையில் கடமை வேண்டும்.

சொன்ன சொல்லைக் காந்தியைப் போல் காக்க வேண்டும்
சோம்பலதைக் காந்தியைப் போல் துறக்க வேண்டும்
மன்னவனோ பின்னவனோ காந்தியைப் போல்
மனிதரெல்லாம் சமமென்று மதிக்க வேண்டும்
சின்னவரோ கிழவர்களோ எவரையேனும்
சிறுமையின்றிக் காந்தியைப் போற் சிறப்புத் தந்து
என்ன குறை எங்கு வந்தீர் எனக் கேட்டு
இன்முகமாய்க் குலவுகின்ற எளிமை வேண்டும்.







All the contents on this site are copyrighted ©.