2012-09-27 15:56:37

மெனிக்பாம் முகாமில் இருந்த மக்கள் காட்டுப் பகுதியில் அடிப்படை வசதிகள் இன்றி துன்புறுகின்றனர்


செப்.26, 2012. மெனிக்பாம் முகாமில் இருந்த கேப்பாப்புலவு பகுதி மக்களை வேறிடத்தில் எல்லா வசதிகளுடனும் குடியேற்றப் போவதாகத் தெரிவித்து அழைத்துச் சென்ற அதிகாரிகள், சீனியாமோட்டை காட்டுப்பகுதியில் கொண்டு சென்று அடிப்படை வசதிகள் ௭துவுமின்றி, குடிப்பதற்குத் தண்ணீர்கூட இல்லாத நிலையில் வெட்ட வெளியில் இறக்கிவிட்டுள்ளதாக அந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.
மெனிக்பாம் முகாமில் இருந்த கேப்பாப்புலவு, சீனியாமோட்டை, புலக்குடியிருப்பு ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 314 குடும்பங்கள் தங்களைத் தமது சொந்த இடங்களில் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் ௭ன்று கடந்த இரண்டு வருடங்களாக வேண்டுகோள் விடுத்து வந்துள்ளபோதிலும், கேப்பாப்புலவில் இராணுவத்தினர் குடியிருப்பதால், காட்டுப்பகுதியில் இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இங்கு நிரந்தர வீடுகள் அமைத்துக் கொடுப்பதற்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என முல்லைத்¬தீவு அரசு அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ள அதேவேளையில், மெனிக்பாம் முகாமில் இருந்து குடும்பங்களைக் கொண்டு வருவதற்கு முன்னால், இங்கு தங்குவதற்கான அடிப்படை வசதிகளையாவது இந்த அரசும் அதிகாரிகளும் செய்துவிட்டு ௭ங்களை மெனிக்பாம் முகாமில் இருந்து கொண்டு வந்திருக்கலாமே என அரசை குறைகூறியுள்ளனர் மக்கள்.







All the contents on this site are copyrighted ©.