2012-09-27 15:48:37

ஆன்மீக மற்றும் கலாச்சார நெருக்கடிகளின் அறிகுறிகளாக பொருளாதார நெருக்கடிகள் உள்ளன


செப்.26, 2012. உலக அளவிலான பொருளாதார நெருக்கடிகள் மேற்கத்திய மதம் சாரா கொள்கைகளின் வெளிப்பாடாக உள்ளன எனத் தெரிவித்தார் உக்ரைன் திரு அவையின் தலைவர் பேராயர் Sviatoslav Shevchuk.
கானடாவில் அந்நாட்டு ஆயர்களுக்கு உரையாற்றிய உக்ரைன் பேராயர், ஆழமான ஆன்மீக மற்றும் கலாச்சார நெருக்கடிகளின் அறிகுறிகளாகவே தற்போதைய பொருளாதார நெருக்கடிகள் உள்ளன எனவும், இவை உக்ரைன் நாட்டின் வருங்காலத்திற்குப் பெரும் சவாலாக உள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றைய நவீன சமூகத்திற்கு ஒரு நங்கூரமாகவும் திசைகாட்டியாகவும் செயல்படும் வண்ணம் திருஅவை புதிய பலத்துடன் நற்செய்தி உண்மைகளை எடுத்துரைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார் பேராயர் Shevchuk.








All the contents on this site are copyrighted ©.