2012-09-26 16:49:45

திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவத்தின்மீது ஆர்வத்தை எழுப்பியுள்ளது


செப்.26,2012. திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் கிறிஸ்தவம் பற்றி அறிந்து கொள்வதற்குக் கடுமையாய் உழைக்கத் தூண்டியுள்ளது மற்றும் கிறிஸ்தவம் பற்றிய ஆவலையும் ஏற்படுத்தி உள்ளது என லெபனனின் ஒரு முஸ்லீம் கழகத் தலைவர் கூறினார்.
இம்மாதம் 14 முதல் 16 வரை திருத்தந்தை மேற்கொண்ட லெபனன் திருப்பயணம் குறித்து ஒயாசிஸ் என்ற நிறுவனத்திடம் பேசிய Makassed என்ற முஸ்லீம் கழகத் தலைவர் Hicham Nachabé இவ்வாறு கூறினார்.
மேலும், திருத்தந்தையின் லெபனன் திருப்பயணம் அன்னைமரியாவின் அடையாளமாக இருப்பதாக அந்நாட்டினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.