2012-09-26 16:55:33

உலகை வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு ஓர் அனைத்துலக ஒப்பந்தம் அவசியம்


செப்.26,2012. ஐ.நா. பொது அவையின் 67வது அமர்வில் உரையாற்றிய மார்ஷல் தீவுகளின் அரசுத் தலைவர் Christopher Loeak, உலகை அதிகம் வெப்பமாக்கிவரும் வாயுக்கள் வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கு சட்டரீதியான ஒப்பந்தம் ஒன்று விரைவில் கொண்டுவரப்படுமாறு கேட்டுக் கொண்டார்.
பசிபிக் தீவு நாடாகிய மார்ஷலின் வேளாண்மை, பசிபிக் பெருங்கடல் மட்டத்தின் உயர்வால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகவும், இதற்கு அனைத்துலக சமுதாயத்தின் உதவி தேவை எனவும் ஐ.நா.வில் பேசினார் அரசுத் தலைவர் Loeak.
மேலும், மற்றொரு பசிபிக் தீவு நாடாகிய Nauru அரசுத் தலைவர் Sprent Dabwido ஐ.நா.வில் பேசிய போது, வெளிமண்டலத்தைப் பாதிக்கும் வாயுக்கள் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதாகவும், அதனால் தங்களைப் போன்ற சிறிய தீவு நாடுகள் கடல்மட்ட உயர்வால் கடும் பேரழிவை எதிர்நோக்குவதாகவும் விளக்கினார்.








All the contents on this site are copyrighted ©.