2012-09-24 15:07:53

சேலம் மாவட்டத்தில் காசநோயாளிகள் அதிகரிப்பு: மருத்துவர் அதிர்ச்சித் தகவல்


செப்.24,2012. சேலம் மாவட்டத்தில், காசநோயாளிகளின் எண்ணிகை அதிகரித்து வருகிறது என மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ் கூறினார்.
சேலம் அரசு மருத்துவமனை காசநோய் சிகிச்சை மையத்தில், காசநோய்த் தடுப்பு மன்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தபோது இத்தகவலை வெளியிட்ட மாவட்ட காசநோய் அதிகாரி சுரேஷ், சேலம் மாவட்டத்தில், தற்போது 800 காசநோயாளிகள் உள்ளதில், 375 பேர் புதிய நோயாளிகள் என்றார்.
காலாண்டுக்கு ஒருமுறை, காசநோயாளிகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருவதன் மூலம், ஆண்டுதோறும், காசநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது என்றார் அவர்.
காசநோய்ப் பாதிப்புக்கு உள்ளானவர்கள், இருமும்போது, அது காற்றில் கலந்து, மற்றவர்களுக்குப் பரவுவதால், அவ்வாறு அது பரவாத வகையில், வாயில் துணி வைத்து இரும வேண்டும் என்ற அறிவுரையையும் முன்வைத்த மருத்துவ அதிகாரி சுரேஷ், இரு வாரங்களுக்குத் தொடர்ந்து சளி, இருமல் இருந்தால், காசநோய்ப் பரிசோதனை மேற்கொள்வது அவசியம் எனவும் கூறினார்







All the contents on this site are copyrighted ©.