2012-09-21 11:14:52

செப்டம்பர் 21 உலக அமைதி தினம்


செப்.21,2012. உலகெங்கும் இடம்பெறும் போர் நடவடிக்கைகள் முழுமையாய் நிறுத்தப்படுமாறு அனைத்துலக அமைதி தினமான இவ்வெள்ளிக்கிழமையன்று கேட்டுக் கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
உலகில் அமைதி காக்கும் பணிகளின்போது இறந்தவர்களை நினைவுகூர்ந்து அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவ்வெள்ளிக்கிழமை நண்பகல் வேளையில் ஒரு நிமிடம் மௌனம் காக்குமாறும் பான் கி மூன் கேட்டுக் கொண்டார்.
ஆயுதம் தாங்கிய மோதல்கள் உலகின் நிலையான வளர்ச்சியின் தூண்களைத் தாக்குகின்றன என்றும், இயற்கை வளங்கள் போர்களுக்காக அல்லாமல் சமுதாயத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.







All the contents on this site are copyrighted ©.